இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள்ஆளுநர் டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
2013 முதல் உருவாகிவந்த நிலைமைக்கு திட்டமிட்ட முறையில் தீர்வை காண மறுத்தமையே இன்றைய நிலைக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
2019க்கு முன்னர் இந்த நிலைக்கு தீர்வை காண்பதற்கு முன்னைய அரசாங்கங்கள் தவறியதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
2019இல் பொருளாதார வளர்ச்சி 2.3 வீதமாக வீழ்ச்சியடைந்தது 2020க்கு சர்வதேச பெருந்தொற்று காரணமாக அது மோசமான நிலையை அடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020க்குள் பொருளாதார வளர்ச்சி -3.0 வீதமாக வீழ்ச்சியடைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
2021இல் பொருளாதார நிலை ஓரளவு வலுவடையும் எனஎதிர்வுகூறப்பட்டிருந்தாலும் மூன்றாவது அலை காரணமாக அது சாத்தியமில்லாமல் போயுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.