கோவிட் தொற்று நிலை 3 காரணமாக, இலங்கைக்கான பயணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம், பிந்திய பயண அறிவுறுத்தலில், தமது குடிமக்களிடம் கோரியுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல் கடந்த அக்டோபர் 25ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் மற்றும் தொடர்புடைய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு தூதரகத்தின் கோவிட் – 19 பக்கத்தைப் பார்வையிடுமாறும் இராஜாங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பயங்கரவாதம் காரணமாக இலங்கையில் எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் சிறிய அல்லது எச்சரிக்கை இல்லாமல் தாக்குதல் நடத்தலாம்.
இந்த நிலையில் தொலைதூரப் பகுதிகளில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசரகாலச் சேவைகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் வரையறுக்கப்பட்ட திறனைக் கொண்டுள்ளதாகவும் இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.