நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10,11,12 மற்றும் 13ஆம் வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நவம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக 200 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை மாத்திரம் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்திருந்த நிலையிலேயே தற்போது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.