போர் வெற்றிகளை நினைவுகூர நினைவிடங்களை நிர்மாணிக்கக் கூடாது என பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.
சந்தஹிரு சேய தாது கோபுரம் போர் வெற்றியை நினைவுக்கூரும் நினைவுத் தூபியாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் இது ஆரம்பிக்கப்பட்ட போதே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் என்றும் அவர் கூறினார்.
குறித்த நினைவிடங்களை நிர்மாணிப்பது தோல்வி யடைந்த தமிழ்த் தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை உருவாக்கும் என்றும் அப்படியான மனநிலை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போரில் வென்றவர்கள் திருப்தியும் பெருமையும் அடைவார்கள். ஆனால் தோல்வியடைந்தவர்களுக்கு துன்பமும், துயரமும் அதிகம் என்பதுடன் தோல்வியடைந்தவர்கள் ஆத்திரமடைவார்கள் என்றும் இதனை நிர்மாணித்ததால், சிங்கள பௌத்தர்கள் சிலரும், இராணுவத்தினர் சிலரும் மாத்திரமே மகிழ்ச்சியடைவர் எனவும் சிறிசுமண தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.