எனது மகனை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரனும் சேர்ந்தே அடித்துக் கொன்றான் – கதறும் தாய்

0

எனது மகனை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரனும் சேர்ந்தே அடித்துக் கொன்றான் என படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சொகுசு பங்களா வாசல் தளத்திற்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் பாலசுந்தரத்தின் கொலையை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரனும் சேர்ந்தே செய்ததாக  கொலைசெய்யப்பட்ட வரின் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்  சொகுசு பங்களாக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பாலசுந்தரத்தின் வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று(13) எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து  தெரிவித்துள்ளனர்:

‘இன்றைய வழக்கில் எனது மகன் பாவித்த கைத் தொலைபேசியை கேட்டுள்ளனர். போன் எங்களிடம் இல்லை ஆனால் கைத் தொலைபேசியின் சிம் கார்டுகள் இரண்டில் ஒரு சிம் கார்ட் மட்டுமே உள்ளது.

கொலை நடந்த அன்று இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரன் என்பவரும் கூடவே இருந்துள்ளார். அவர் கறுத்த பிக்காபில் வந்து நின்றுள்ளார்.

அவருடன் அவரது மனைவி, பிள்ளைகள், இராஜாங்க அமைச்சரின் மனைவி பிள்ளைகள், மாமியார் என எல்லோரும் நின்றுள்ளனர்.

11 பேர் சேர்ந்து அடித்தும் வெடி வைத்தும் எனது மகனை கொலை செய்ததாக கேள்விப்படுகிறோம்.

மண் பேமிட் எடுத்து தாரன் என்று காசையும் வாங்கிப்போட்டு என்ற மகனை சுட்டு கொலை செய்து போட்டானுகள். சுற்றி சுற்றி இருந்த கமரா ஒன்று கூட வேலை செய்யாமலா இருந்தது. எல்லா கேமராவில் இருந்ததையும் அழித்துப் போட்டார்கள் மண் பேமிட்டுக்காக எனது மகனை சுட்டு கொலை செய்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரனை 12 ம்மாதம் 27ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.