ஒரே நாளில் “கோவிட்” தடுப்பூசியை 10 தடவைகள் செலுத்திக் கொண்ட “நம்பமுடியாத சுயநலவாதி”

0

நியூஸிலாந்தில் ஒரே நாளில் 10 முறை கோவிட்டுக்கு எதிராக தடுப்பூசியை பெற்றவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது

இந்தநிலையில் அவரை “நம்பமுடியாத சுயநலவாதி” என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் ஏனையவர்களின் பெயர்கள் தடுப்பூசிகளை பெற்றுள்ளதாகவும் அதற்காக பணம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நியூஸிலாந்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

பரிந்துரைக்கப்பட்டதை விட அதிகமான தடுப்பூசி அளவை பெற்றுக்கொண்டால் அவர் விரைவில் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வேறொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்துவது “ஆபத்தானது” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தவறுதலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கேள்விப்பட்டுள்ள போதும் இது போன்ற சம்பவத்தை கேள்விப்பட்டதில்லை என்றும் நியூஸிலாந்தின் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.