பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போகும் இரண்டு தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் சிரேஸ்ட மருத்துவ அலுவலர் ருவன் விஜேமுனி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்
தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும் கோவிட்டுடன் டெங்கு தொற்றும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
கடந்த நவம்பர் மாதத்தில் கணிசமான அளவு டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்
இந்த தொற்றுக்கள் எதிர்வரும் ஜனவரி வரையில் பரவக்கூடும்
இதன் காரணமாக கோவிட்டுடன் டெங்கு தொற்றும் பரவினால் அது நாட்டின் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஜேமுனி எச்சரித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்