சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்

0

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை (04) கொண்டாடப்படவுள்ள 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

அதற்கமைய, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும் கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும் களுத்தறை சிறைச்சாலையில் 13 கைதிகளும் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளனர்.

போகம்பறை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலிருந்து தலா 11 கைதிகளும் வாரியபொல சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.