டிஜிட்டல் அடையாள அட்டை முறைமைக்கு இந்தியாவிடம் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அடையாள அட்டை முறைமைக்கு நிவாரணம் வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
உயிரியல் விஞ்ஞான தரவுகள் அடிப்படையில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தலும் சைபர் தளத்தில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தலும் இந்த நடைமுறையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இணைந்த டிஜிட்டல் அடையாள கட்டமைப்பாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.