அம்பாறையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 07 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் அண்மைக் காலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 07 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நேற்று (08) மாலை அக்கரைப்பற்று பொலிஸார், குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.