‘இந்திய பிரதமரை சந்திக்க தயாராகிறது தமிழ்க் கூட்டமைப்பு’

0

மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரம் ஒதுக்கித்தருமாறு கோரியுள்ளது என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் வருகை குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரையில் தமது கட்சிக்கு அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர்,
எவ்வாறாயினும், வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு இந்தியா பெரும் பொறுப்பு வகிக்கும் நிலையில், அதனைத் தீர்ப்பதற்கு தலையிடுமாறு கோரி பல தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் பிரதமர் மோடிக்கு முன்னர் கடிதம் அனுப்பியிருந்ததை சம்பந்தன் நினைவு கூர்ந்தார்.

இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களும் இந்தியப் பிரதமருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் அவர் கோரியுள்ளார்.

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்த சந்திப்பு வாய்ப்பாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.