‘நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட விமல், கம்மன்பில முடிவு’

0

அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் 10 கட்சிகளின் 16 எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறுள்ள பேச்சுவார்த்தையையடுத்து மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிணங்க, அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளாக செயற்படும் விமல் வீரவன்சவின் கட்சியில் ஆறு எம்.பிக்களும் வாசுதேவ நாணயக்காரவின் கட்சியிலிருந்து இரண்டு பேரும், உதய கம்மன்பில, அதுரலிய ரதனதேரர், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட 16 பேரே பாராளுமன்றத்தில் இவ்வாறு சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கெதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.