தனித்தன்மை வாய்ந்த மற்றும் வடிவமைக்கப்பட்ட ஆடை உற்பத்தி துறையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பினைப் பெற்ற VIGO வர்த்தக நாமம் தனது மற்றுமொரு கிளையினை திறந்துள்ளது.
இலக்கம் 289, காலி வீதி, வெள்ளவத்தை பகுதியில் இந்த புதிய கிளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பினை மையப்படுத்தி ஆரம்பட்ட VIGO வியாபார நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பினை பெற்றுள்ள ஒரு நிறுவனமாகும்.
தற்போதைய நவநாகரீக உலகில் காலத்தின் தேவைக்கேற்ற வகையில் VIGO வியாபார நிறுவனம் பத்திக் ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.
VIGO வியாபார நிறுவனத்தின் ஆடையகங்கள் மட்டக்களப்பு, கல்முனை மற்றும் கொழும்பின் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.