எரிபொருள் பதுக்கிவைப்பு: எரிபொருள் நிலைய உரிமையாளரின் அனுமதிப்பத்திரம் இரத்து!

0

ஜா-எல பகுதியில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாக 4 பெற்றோல் மற்றும் டீசல் கொள்கலன்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவரின் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

ஜா-எல, பமுனுகம எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் அனுமதிப்பத்திரமே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.