கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1028 ஆக அதிகரிப்பு

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இறுதியாக தொற்றுக்குள்ளானவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக சமூகத்தில் இந்நோய்த்தொற்று பரவியவர்கள் எவரும் இனங்காணப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 585 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 37 பேர் கடற்படை வீரர்களின் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்சமயம் 435 கொரோனா தொற்றாளர்கள் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதுடன், 112 பேர் நோய்த் தொற்று சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான 584 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன், 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.