ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமைந்துள்ள புதிய அமைச்சரவையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் இன்று (வியாழக்கிழமை) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
அதற்கமைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னியாராச்சி, ஜீ.எல்.பீரிஸ், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வாசுதேவ நாணயக்கார மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகிய அமைச்சர்கள் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
அத்தோடு இராஜாங்க அமைச்சர்களான டீ.வி சானக, சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை, நாலக கொடஹேவா மற்றும் பியல் நிஷாந்த ஆகியோரும் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்களும் 39 இராஜாங்க அமைச்சர்களும் கண்டி தலதா மாளிகையில் நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.