மேல் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 550 வலையமைப்புகள்

0

மேல் மாகாணத்திற்குள் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 550 இற்கும் மேற்பட்ட வலையமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வலையமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களினி பிரிவில் நேற்று கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் வங்கிக் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் குறித்த சந்தேக நபரின் வங்கி கணக்கிற்கு 2 மாதங்களுக்குள் ஏழரை கோடி ரூபா பணம் வைப்பிலிப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.

அத்துடன் சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகையான பணமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.