மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்- இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

0

இலங்கையும் கொரோனா வைரஸ் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் நியுஸிலாந்து போன்ற மிகவும் முறையாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நாடுகளில் கூட மீண்டும் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலமையில் சிறிய தீவான எமது நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவ்வாறு இல்லாவிடின் கடந்த மாதங்களை போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.