சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு சுமணரத்ன தேரர் தொடர்பில் பெண் ஒருவர் கூறும் புதிய திடுக்கிடும் வீடியோ

0

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரதன தேரர் மட்டக்களப்பில் குடியிருக்கும் சிங்கள குடும்பம் ஒன்றை அவர்கள் குடியிருக்கும் காணிகளில் இருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அடாவடித்தனத்தில் ஈடுபடும் இந்த பிக்கு, தனக்கு அடிப்பணியாத சிங்களவர்களுக்கு எதிராகவும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

சுமணரதன தேரர் – மனைவி மற்றும் பிள்ளைகளை அம்பாறையில் கைவிட்டு, கள்ள மனைவியுடன் அரச காணியை பிடித்துக்கொண்டு இருக்கின்றாய். அதன் காரணமாகதானே விகாரையை விமர்சிக்கின்றீர்.

அரச காணியில் இருப்பவர் – சரி இதனை பொலிஸில் கூறுங்கள். பொலிஸின் கடமையை நீங்கள் செய்வது தவறு.

சுமணரதன தேரர் – இல்லை, இந்த கிராமத்தை உருவாக்கியது நான்.

அரச காணியில் இருப்பவர்- அது அரசாங்க அதிபருக்கு தெரியும்.

சுமணரதன தேரர் – அதுதான் ஏ.ஜீ. வழக்கு தாக்கல் செய்துள்ளார். .இந்த கிராமத்தை நானே உருவாக்கினேன்.

அரச காணியில் இருப்பவர்- கிராமத்தை சீரழித்தது நீங்கள்.

சுமணரதன தேரர் – நானா கிராமத்தை சீரழித்தேன். நீங்கள் எப்படி நடுவில் வந்து குடியேறினீர்கள்.

அரச காணியில் இருப்பவர் – நீங்கள் வருவதற்கு முன்னர் இருந்தே நான் இங்கு இருக்கின்றேன்.

பெண் ஒருவர் பொலிஸாரிடம் – சார் நீங்கள் எங்களிடம் கூறும் முன்னர் தேரரிடம் கூறுங்கள், அவர் பட்டாசு போட்டு குதித்து ஆட்டம் போடுகிறார். அதனை தடுக்காமல் தினமும் பொலிஸார் வந்து என்னை தொல்லை பண்ணுகின்றனர்.

நான் எங்கோ இருக்கும் பிக்குவுக்காக வீடு கட்டவில்லையே… பௌத்த பிக்கு என்பதற்காக இவ்வளவு காலம் பொறுத்திருந்தேன். பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எனக் கூறினார்.