BREAKING NEWS :- (UPDATE) திருகோணமலை படகு விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு (VIDEO/PHOTOS)

0

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களிலேயே 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த படகில் 25 முதல் 30 பேர் வரை பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

விபத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேசவாசிகள், கடற்படை, பொலிஸார் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.