COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் ஸ்தாபிப்பு!

0

கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் சமூக சுகாதார மேம்பாட்டிற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய நிதியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் என இந்த நிதியம் பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்த நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உள்நாட்டு, வௌிநாட்டு நன்கொடையாளர்கள் இந்த நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான கணக்குகள் ஊடாக நிதியை வைப்பிலிடுபவர்கள் வௌிநாட்டு செலவாணி விதிமுறைகளிலிருந்து விடுபடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.