G.C.E. (O/L) பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு

0

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை சாதாரண தர பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை, கொரொனா தொற்று காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்று அதிகளவில் பரவிவருகின்றதை கருத்திற் கொண்ட கல்வி அமைச்சு, கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை பிற்போட தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது