IDH வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளர் கண்டுபிடிப்பு

0

முல்லேரியா IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே அந்நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், கொரோனா நோயாளர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த எல்சியாம் நசீம் எனும் 41 வயதான குறித்த நபர், இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அந்நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவரை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தேசிய வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கும் இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பதில் பொலிஸ் மா அதிபரினால் பணப்பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.