Online முறையில் புதிய உறுப்பினர்கள் பதிவு

0

பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களை இணையத்தின் ஊடாக பதிவுசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியலில் தெரிவான உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி வெளியான பின்னர்,   குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, நாடாளுமன்றின் பிரதிச் செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாடாளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு வருகைதராமல் தம்மை பதிவுசெய்துகொள்ள முடியும்.

இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசியப் பட்டியலில் தெரிவான உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி வெளியான பின்னர் நாடாளுமன்றின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்கு சென்று பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.