இன்று நள்ளிரவு நாடு முடக்கப்படுமா?

0

கொழும்பு – வெல்லம்பிட்டி பகுதியிலுள்ள தனிமைப்படுத்தப்பட்டிருந்த லக்சந்த சேவன தொடர்மாடி குடியிருப்பின் தனிமைப்படுத்தல் இன்று அதிகாலை முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை அபயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தினநகர் பகுதி ஆகியன இன்று அதிகாலை முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

அத்துடன், நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் முடக்குவதற்கான எண்ணம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.