உலகவாழ் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) பயபக்தியாக அனுஷ்டிக்கின்றனர்.
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் உலக மக்களின் பாவங்களுக்காகவும், சாபங்களுக்காகவும் இயேசு கிறிஸ்து தனது இன் உயிரை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார்.
இதனை நினைவு கூர்ந்தே உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றைய வெள்ளிக் கிழமையினை மிகவும் பத்தியாக அனுஷ்டிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமான புனித வாரத்தில் இறுதியாக வரும் மூன்று நாட்களும் மிக முக்கியமானவை.
அதற்கமைவாக இன்றைய தினம் இயேசு கிறிஸ்துவின் இறப்பை நினைவு கூரும் பெரிய வெள்ளி அனுஸ்டிக்கப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதார நிலை காரணமாக இம்முறை புனித வார ஆராதனைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
வீடுகளில் இருந்த வாரே புனித வாரத்தினை கடைப்பிடிக்குமாறும் கொழும்பு பேராயர் இல்லம் கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.