ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்கள் இன்று முதல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்!

0

ஊரடங்கு சட்டத்தினை மீறி வேறு மாவட்டங்களுக்கு பயணிப்போர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட 19 மாவட்டங்களிலும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த 19 மாவட்டங்களிலும் இன்று மாலை 4 மணி தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.