இரண்டாம் தர பிரஜையாக நடாத்தப்பட்டால் நாம் பிரிந்துசெல்வதை தடுக்க முடியாது.

0

ஒரேநாட்டுக்குள் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்வதற்க்கு தமிழ் மக்களாகிய நாம் தயார். ஆனால் நாம் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்குத் தயாரில்லை. அவர்கள் எங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தினால் நாங்கள் பிரிந்து செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வரிந்து கட்டிக்கொண்டு சண்டியனைப்போன்றுநாம் எவருக்கும் பயப்படவில்லை என்று சொல்லி சிங்கள மக்கள் மத்தியிலே உடனடியாக ஒரு பிரபல்யத்தைப் பெற அவர்கள் செய்வது அவர் களுக்கும் கேடானது, நாட்டுக்கும் கேடானது. ஐ.நா. தீர்மானத் தில் இருந்து விலகியமைக்காக இலங்கை பாரதூரமான விளைவு களை எதிர்நோக்க நேரிடும்.

இருவாரங்களுக்கு முன்னர் நான் அங்கு ஜெனீவா) சென்று உறுப்பு நாடுகளுடன் பேசினேன். அப்போது நான் அவர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தி ருந்தேன். இப்படி அவர்கள் ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலகக் கூடும், அப்படி அவர்கள் செய் தால் அந்தத் தீர்மானங்களின் உத்தியோகபூர்வ நிலை என்ன என்பது குறித்து உறுப்பு நாடுகள் உலகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாம் சொல் லியிருந்தோம்.

உள்நாட்டுப் பொறிமுறை எதையுமே செய்யாத நிலையில் தான்சர்வதேசவிசாரணை ஒன்று வந்தது. கலப்பு நீதிமன்றப்பொறி முறையை ஏற்படுத்தி அதன்படி செயற்படுவோம் என இலங்கை அரசும் இணங்கி வந்தது. ஆனா லும் நல்லாட்சி அரசு கூட தனது நான்கரை வருட காலத்துக்குள் அந்தக்கலப்பு நீதிமன்றப்பொறி முறையை ஏற்படுத்தவில்லை.

இப்போது வந்துள்ள புதிய அரசு, நாங்கள் இந்தத் தீர்மா னத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம், நாங்கள் ஒருசுயாதீன மான நாடு, இறைமையுள்ள நாடு, எங்கள் நாட்டுச் சட்ட திட் டத்துக்கு அமைவாகச் சில விட யங்களைச் செய்வோம் என்று சொல்லியுள்ளார்கள்.

இலங்கை விடயத்தில் ஐ.நா. உறுப்பு நாடுகள் வேறு மாற்று வழிகளையும் உபயோகிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இரு வருடங்களுக்கு முன்பே சொல் லிவிட்டார். அதனை இப்போது சவேந்திர சில்வா விடயத்தில் முதலில் செய்திருக்கின்றது அமெ ரிக்கா. அதனை இனி ஏனைய உறுப்பு நாடுகளும் செய்யும். இனி வரும் ஒரு வருட காலத் துக்குள் இந்த மாற்றுவழிகளை நாங்கள் காணலாம்.

இலங்கை அரசின் முடிவு நாட்டுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சவேந்திர சில்வா போன்றுவேறுஆள்களுக்கு எதி ராகவும் பயணத்தடை வரலாம்.

தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறு வதற்காக இலங்கை அரசு எடுத்த இந்த முடிவு அவர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாகவே அமை யும். அது எங்களுக்கு நன்மை யளிக்கக் கூடும்.

ஒரேநாட்டுக்குள் வாழ்வதற்கு நாம் தயார். ஆனால் நாம் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்குத் தயாரில்லை. அவர்கள் எங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தினால் நாங்கள் பிரிந்து செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி யில்லை – என்றார்.