இலங்கையில் விரைவாக பரவும் வைரஸின் புதிய மாறுபாடு

0

கோவிட் வைரஸின் ஒரு ‘புதிய மாறுபாடு’ மிகவும் விரைவாக பரவி வருவதாக ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்புத் துறைத் தலைவர் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுக்களின் மாதிரிகளில் எந்த வகையான மாறுபாடுகள் உள்ளன என்பதைக் கண்டறிய நாட்டில் மரபணு ஆய்வுகளை பேராசிரியர் மாலவிகேயின் ஆய்வகமே மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாறுபாடு எது என்பதை அடுத்த வாரத்தில் உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கும் மாலவிகே தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமையைப் பார்க்கும்போது, கடந்த வாரத்தில் அதிக பரவுதல் ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தபோதும் வேகமாக அதிகரிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது மேலும் தீவிரத்தன்மை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அறிகுறியற்றவர்கள் அல்லது இலேசான அறிகுறிகளை கொண்டவர்களாக இருந்தனர்.

இப்போது பெரும்பாலான மக்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்தாலும், கடுமையான அறிகுறிகளை உருவாக்கும் அச்சம்; அதிகரித்து வருகிறது.

புதுவருடத் தினங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறக்கணித்தமைக் காரணமாக சுமார் 10-14 நாட்களில் மேலும் கோவிட் தொற்றுக்கள் அதிகரிக்கும் என்று மாலவிகே தெரிவித்துள்ளார்.