இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய எச்சரிக்கை

0

போலி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குற்ற விசாரணை பொலிஸார் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் என கூறி, தொடர்பு கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த கும்பல் தொலைபேசிகளுக்கு அழைப்பேற்படுத்தி, அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பதாக தெரிய வந்துள்ளது.

 தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.