உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுகை நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் பொறுப்புக்கள் குறித்து டொக்டர் அலுத்கே விளக்கியுள்ளார்.
நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி மற்றும் தலைவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டால் வலிகள் தாங்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும் வரையில் காத்திருக்காது, வலி ஏற்படும் போதே வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தங்களது உடல் சாதாரண நிலையில் இருக்கும் போதே ஏதேனும் வலி ஏற்பட்டால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதே பொருத்தமானது எனவும் டொக்டர் அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.