ஊரடங்குச் சட்டத்தினையும் மீறி களியாட்ட நிகழ்வு – 8 பேர் கைது!

0

பண்டாரவளையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹப்புத்தளையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் விற்பனை நிலையத்தை திறந்து வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.