கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை!

0

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டால் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 வரையிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகின்றனர்.

இதன் காரணமாக பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் கடந்த இரண்டு மூன்று நாட்களில் அவதானித்ததற்கு அமைய மக்கள் சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படுவதை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு நீடித்தால் நோயாளர்கள் மீண்டும் அதிகரிக்கக் கூடும். பின்னர் கடுமையான பயணக் கட்டுப்பாட்டினை விதிக்க வேண்டி ஏற்படும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.