குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் உட்பட குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் (நேற்று முன்தினம்) 24, நேற்று 33, இன்று இதுவரை 05) 61 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.