கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 46 பேர் இன்று(வெள்ளிக்கிழமை) முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் இதுவரை ஆயுிரத்து 196 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் ஆயிரத்து 877 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 670 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 651 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.