பொலனறுவை வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை 322 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 2 பேர் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதுவரை 104 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது 211 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.