கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது!

0

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 515 பேர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 147 பேரும், பேலியகொடை கொரோனா கொத்தணியை சேர்ந்த 368 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.