கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு

0

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 12 இல் வசிக்கும் 54 வயதுடைய ஆண் ஒருவரும் மீகொடயில் வசிக்கும் 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.