கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிரசவம்!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய சந்தேகத்தில் கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) குழந்தை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகள் இப்பெண்ணுக்கு ஏற்பட்டதால் அவர் இவ்வாறு காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் அப்பெண்ணின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் , தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் காசல் மகப்பேற்று வைத்தியசாலையின்  பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.