‘சட்ட நடைமுறைகளை ஜனாதிபதி பின்பற்ற வேண்டும்’

0

தகவலறியும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த செப்டெம்பர் மாதம் நிறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கும் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா, 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ஆணையாளர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர், ஏனைய உறுப்பினர்கள் நியமிக்கப்படும்போது,  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பரிந்துரைகள் பெறுவது பாராளுமன்ற பேரவையின் பொறுப்பு எனவும்  ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா தெரிவித்துள்ளது.

எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப் பேரவை போலல்லாது, யாரை நியமிக்க வேண்டுமென்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு வெளிப்படையாக பாராளுமன்ற பேரவையால் பெயர்களைப் பரிந்துரைக்க முடியாது. வெறும் அவதானிப்புக்களை மாத்திரமே செய்ய முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவுக்கு நியமனங்களை மேற்கொள்ளும்போது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி கருத்திற்கொள்ளவாரென TISL எதிர்பார்ப்பதாகவும், ஜனநாயகத் தன்மை தொடர்ந்து நிலைநாட்டப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.