சமலின் கீழ் கொண்டுவரப்பட்டது குடிவரவு – குடியகல்வு திணைக்களம்

0

பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட, குடிவரவு – குடியகல்வு திணைக்களம், மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமைச்சுகளுக்கான விடயங்கள் தொடர்பில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் திருத்தத்தை மேற்கொண்டு கடந்த 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சு அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் கீழ் இயங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.