சரியான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை!

0

கண்டி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் 24 கொரோனா  தொற்றாளர்களே பதிவாகியுள்ளனரென, கண்டி பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் மேற்கண்டவாற தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 4ஆம் திகதி 6 தொற்றாளர்களும் 5ஆம் திகதி 18 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்,

சில ஊடகங்களில் போகம்றை பழைய சிறைச்சாலை தொற்றாளர்களுடன் கடந்த 2 நாள்களாக 100-200 தொற்றாளர்கள் கண்டியில் இனங்காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செய்திகள், கண்டி மாவட்ட மக்களுக்கு அநாவசிய பீதியை ஏற்படுவத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.