சிறிய குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு வழிகாட்டுதல்களையும் ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் கைதிகளுக்குள் பரவக்கூடும் என்பதனால் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்படவுள்ளது.
அந்தவகையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தவிர்த்து, மற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 5000 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் போதைப்பொருள் சிறு குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.