சீனாவில் காட்டுத் தீ – தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு!

0

சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் உள்ள சிச்சாங்கில் (Xichang) பண்ணை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதிக்கும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதில் சிக்கிய சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவரும், தீயணைப்பு வீரர்கள் 18 பேரும் உயிரிழந்தனர்.

இதுவரை ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் தீ பரவியுள்ள நிலையில் தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தீ ஏற்பட்ட பகுதிக்கு அண்மித்துள்ள கிராமங்களில் இருந்து 1200 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.