கொரோனா வைரஸிற்கு எதிராக சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க சீன நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிய கடிதத்தில் சீனாவிற்கான இலங்கை தூதுவர் வைத்தியர் பாலித கோஹோன இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸிற்கு எதிராக சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசி 78% அளவில் தொற்றாளர்களில் வினைத்திறனை காண்பித்துள்ளதாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.