தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிக்கப்படுகின்றன

0

கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் நாளை விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (திங்கட்கிழமை) அதிகாலை ஐந்த மணிமுதல் வெல்லம்பிட்டிய சாலமுல்ல கிராம சேவையாளர் பிரிவு, வௌ்ளவத்தை, கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பில் ஏற்கனவே லொக்டவுனில் உள்ள ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலப்பிட்டிய – நைதூவ பகுதி, பேலியகொட பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம சேவகர் பிரிவு மற்றும் கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம சேவையாளர் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகிறது.

இதனிடையே, கம்பஹாவில் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் உள்ள ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.