தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பாரென கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில், முரண்பாடுகள் ஏற்பட்டமை காரணமாக பேச்சாளர் தெரிவு நேற்றைய தினம் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது.

பேச்சாளர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைக்கப் பட்டிருப்பதால் எம்.ஏ.சுமந்திரனே அதுவரை தொடர்ந்தும் பேச்சாளராகச் செயற்படுவார் என கூறப்படுகின்றது.

எனினும், கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சுமந்திரன் தனது பேச்சாளர் பதவியினை இராஜினாமா செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.