திருகோணமலை மாவட்டத்தில் ஒன்பது கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்

0

திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஒன்பது பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக திருகோணமலை நகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

குச்சவெலி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரத்தில் இருவரும், நகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரத்தில் மூவரும், உப்புவெளி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரத்தில் நால்வரும் கோவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அவர்களைப் பொருத்தமான கோவிட் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகத் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.