தொழில் எதிர்பார்ப்போருக்கு அரிய வாய்ப்பு – முழுமையான தகவல் இங்கே

0

தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர், யுவுதிகள், தமது பெயர்களை மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில் கேந்திர நிலையத்தில் பதிவு செய்துக்கொள்ளுமாறு இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்துக்கொள்ளும் தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளை, தனியார் துறைகளிலுள்ள தொழில் வெற்றிடங்களுக்கு ஈடுபடுத்த முடியும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, தனியார் துறைகளில் தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருப்போர், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.dome.gov.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, பதிவு செய்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லையென்றால், மாவட்ட செயலகங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொழில் கேந்திர நிலையத்தில் பதிவு செய்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று பரவி வருகின்ற நிலையில், தொழில் வாய்ப்புக்களுக்காக வீட்டில் இருந்தவாறே இணைய வழியில் பதிவு செய்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அல்லது மாவட்ட தொழில் கேந்திர நிலையங்களை தொலைபேசியூடாக அணுக முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் தொலைபேசி இல
01.கொழும்பு 011-2369258
02.கம்பஹா 033-2248990
03.களுத்துறை 034-2236162
04.காலி 091-2233906
05.மாத்தறை 041-2231319
06.ஹம்பாந்தோட்டை 047-2242766
07.கண்டி 081-2068229
08.மாத்தளை 066-2222824
09.நுவரெலியா 052-2224186
10.கேகாலை 035-2221733
11.இரத்தினபுரி 045-2232996
12.குருநாகல் 037-2221402
13.புத்தளம் 032-2266253
14.பதுளை 055-2228030
15.மொனராகலை 055-2277248
16.அநுராதபுரம் 025-2234988
17.பொலன்னறுவை 027-2056715
18.அம்பாறை 063-2222233
19.மட்டக்களப்பு 065-2227193
20.திருகோணமலை 026-3209245
21.யாழ்ப்பாணம் 021-2219359
22.வவுனியா 024-2228025
23.மன்னார் 023-2222232
24.கிளிநொச்சி 021-2283966
25.முல்லைத்தீவு 021-2290037