மட்டக்களப்பில் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் – கிழக்கில் அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கை

0

மட்டக்களப்பு நகரில் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் நேற்று மாலை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்திலேயே 74வயதுடைய பெண்னொருவர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 09ஆம் திகதி கொழும்பில் இருந்துவந்து சுயதனிமைப்படுத்தலில் இருந்தவரே இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பில் இருந்துவரும்போதே சுகாதார துறையினருக்கு அறிவித்திருந்ததாகவும் சுகாதார பகுதியினர் தெரிவித்தனர்.

இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.